கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழா,தமிழ் நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கோவை மாவட்டம் 3 வது ஆண்டு விழா,சங்கரதாஸ் சுவாமிகள் 158 வது பிறந்தநாள் விழா,கே.பி.சுந்தராம்பாள் 117 வது பிறந்த நாள் விழா,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 98 வது பிறந்த நாள் விழா என ஐம்பெரும் விழா கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டப அரங்கில் நடைபெற்றது..
கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் அஜ்மீர் சாகுல் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் ஜெயன்,பொருளாளர் பூபேஸ்,ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இதில் தமிழகம் முழுவதும் இருந்து நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள்,நாடக மற்றும் திரைப்பட நடிகர்கள்,என பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் கே.பி.சுந்தராம்பாள் அவர்களுக்கு அவர் வாழ்ந்த இடத்திலேயே சிலை அமைப்பதற்கான பணிகளை துவங்கி உள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.