பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்த விளக்க கூட்டமானது மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர், திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு எம்.முருகானந்தம், ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்ளின் “GST 2.0 மறு சீரமைப்பதற்கு, நன்றி தெரிவிப்பது மற்றும் மத்திய அரசின் “Next-Gen Gst 2.0 விளக்க” பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட துணைத் தலைவர்கள் கே.நீலமேகம், வழக்கறிஞர்கள் வி.ஜெயக்குமார், சேகர் மாவட்ட பொதுச் செயலாளர்கள்
ஜி.இளையராஜா,எம்.சுப்பிரமணியன், உடையார்பாளையம் எஸ்.நாகராஜ், மண்டல தலைவர்கள் தா.பழூர் (கிழக்கு) ஒன்றியம் ஆர்.கே.சக்திவேல், ஆண்டிமடம் ஒன்றிய மண்டல தலைவர் குவாகம் கே.பரமசிவம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வழக்கறிஞர் குமரகுரு, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்க பேருரையாற்றினார்.
கூட்டத்திற்கு முன்னிலை திருவாளர்கள், மத்திய அரசு தொடர்பு பொறுப்பாளர் எ.சேகர்,மற்றும் நகரத் தலைவர் ஆர் வரதராஜன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் நிறைவாக நகரப் பொதுச் செயலாளர் சி.பிரகாஷ், நன்றி கூறி, கூட்டத்தினை நிறைவு செய்தார்.