தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்ற தஞ்சைத் தமிழ் மன்றம் மற்றும் குடந்தை இலக்கிய பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் கதிராமங்கலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குடந்தை இறைத்தமிழ் கு.செல்லதுரை அவர்களினுடைய “சிந்தனை வெண்பா” என்ற நூலானது வெளியிடப்பட்டது.
நிகழ்வுக்கு தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் தமிழ்ச் செம்மல் இராம.வேல்முருகன் தலைமை தாங்கி நூலைப் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் அறிமுக உரையை நிகழ்த்தினார். நிகழ்வில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் இ.மாதவன் அவர்கள் கலந்து கொண்டு நூலை வெளியிட கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் இரா.சுந்தர் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மன்றத் துணைத் தலைவர் குஞ்சித சுகுமார், துணைச் செயலாளர் இளைய தீபன் மகாலிங்கம், புலவர் சோ.மோகன், புலவர் திருமாவளவன், மதிவாணன் மற்றும் புதுக்கோட்டை, முசிறி, தஞ்சை மாவட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு வருகை தந்தவர்களை கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை சி.ரம்யா வரவேற்றார்,
கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ர.மகாலெட்சுமி நன்றி கூறினார்.நிகழ்வுகளை முனைவர் மதுரை முத்து தொகுத்து வழங்கினார்.