முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால் வாங்கி தண்ணீர் திறந்து விட்ட தேனி எம்பி

தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றிலிருந்து 18 ஆம் கால்வாய் பி.டி.ஆர் . மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களிலிருந்து தண்ணீரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி திறந்து வைத்தார் .

இது குறித்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கூறும் போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 18 ஆம் கால் வாயிலிருந்து பழனிவேல் ராஜன் கால்வாய் திறந்து விடப்படும் தண்ணீர் உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட புதுப்பட்டி அனுமந்தன்பட்டி பண்ணைப்புரம் கோம்பை தேவாரம் தே. சிந்தலைச்சேரி சங்கராபுரம் வெம்பக் கோட்டை பொட்டி புரம் லட்சுமி நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 2568.90 ஏக்கர் நிலங்கள் பாசன நிலங்கள் என மொத்தம் 4614.25. ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு 265 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சின்னமனூர் தாலுகாவிற்கு உட்பட்ட. சின்னமனூர் வேப்பம்பட்டி சீப்பால கோட்டை மற்றும் இந்த சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 830 ஏக்கர் நிலங்களும் தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பூமலைகுண்டு சீலையம்பட்டி தர்மாபுரி தாடிச்சேரி வெங்கடாசலபுரம் கொடுவிலார்பட்டி ஜங்கால்பட்டி கோவிந்த நகரம் மற்றும் இதனை சுற்றியுள்ள 4316 ஏக்கர் என 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 1037. மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விவசாய பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *