காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் அம்மனுக்கு பஞ்சவர்ண காப்பில் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவத்தில் கடைசி நாள் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது
இதில் காலையில் கோ பூஜை நடைபெற்று மூலவர் அம்பாளுக்கு பஞ்சவர்ண காப்பு சாத்தப்பட்டு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது
இதனை தொடர்ந்து தீபாராதனகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது விழா உபயத்தினை ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்த வீரன் ரத்னா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் ரவிக்கை வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் அன்னப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது
விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர் இதில் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.