“கீழக் கொட்டையூர்:கல்வி கற்பித்தலை கவுரவிக்கும் வகையில் வள்ளலார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது”
தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு 38 பள்ளி ஆசிரியர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி கீழக் கொட்டையூர் வள்ளலார் கல்வி அரங்கத்தில ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம்,மாவட்டத் தலைவர் வள்ளலார் தினம் லயன் இரவி தலைமை தாங்கினார். தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்து பேசி அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டி கவுரவித்தார்.
இவ்விழாவில் வள்ளலார் கல்வி அறநிலையங்கள்,தலைவர் தயாளன் , செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட அவைச் செயலாளர் ரத்னகுமார்,மாவட்ட அவைப் பொருளாளர் ஜனார்த்தனன், GAV மாவட்ட தலைவர் ஆடிட்டர் ராஜேந்திரன், Region 3மண்டலத் தலைவர் ரமேஷ்,மாவட்ட நிர்வாக அலுவலர் சசிதரன்,Region 3A வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் ,ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.இதில் அனைத்து லயன்ஸ் சங்கம் தலைவர் பொருளாளர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்