சத்தியமங்கலம் அக். 6
சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடி அருகே உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி பழுதான நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரியின் இருந்த மேல் போடப்பட்டிருந்த தார்ப்பாயை நகர்த்தி லாரியில் இருந்த உருளைக்கிழங்குகளை தும்பிக்கையால் பறித்து சுவைத்து தின்றது பின்னர் காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது
இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினர் இந்த காட்சி அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனச்சாலையில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்