திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜி.ரவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் ஏ.மருதையன் மற்றும் எம். கண்ணையன், ஆர்.சேகர், கே.எஸ்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழ உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான வை.செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் கு.ராஜா, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார், அடிப்படை கோரிக்கைகளை ஆதரித்து மதிமுக ஒன்றிய செயலாளர் ஜான் பிரதாப், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் கே.செல்வராஜ், ஏ ஜ ஒய் எஃப் ஒன்றிய தலைவர் கே.சுதாகர், மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ்.சுதா, நகர சிபிஐ செயலாளர் ராதா ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை கொடு, கொடுக்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் கொடு, 100 நாள் வேலைத் திட்டத்தின் பணியாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு ரூ.5000 வழங்கிடு, முன்னாள் முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட நல வாரியத்தை மீண்டும் அமுல்படுத்திடு, 100 நாள் வேலையை 200 நாட்களாக அறிவித்து நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.800 சம்பளம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட 175 விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் முன்னிலையில் 30 க்கும் மேற்பட்டோர் அனுதினமும் மக்களுக்காக போராடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *