திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர் காங்கிரஸ் சங்கம் ஐஎன்டியுசி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குடவாசல் வட்டார தலைவர் மினிய அய்யா தலைமை வகித்தார்,
நகரத் தலைவர் செந்தில் வேலன் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பொதுத் தொழிலாளர்கள் காங்கிரஸ் சங்கம் ஐஎன்டியுசி யின் திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம் மைதீன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,
தொடர்ந்து அவர் பேசுகையில் தொடர்ந்து உடல் உழைப்பு, கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களாக மாற வேண்டும், இதன் மூலம் தமிழக அரசு தொழிலாளர் துறை வழியாக வழங்குகின்ற உதவிகளையும், மானியங்களையும் பெற வேண்டும், ஊக்கத்தொகை, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இறப்பு உதவித் தொகை மற்றும் பல உதவி திட்டங்களை தமிழக அரசு வழங்குகிறது இதனை பெற்று பயன் பெற வேண்டும், என்றும் வாரியத்தில் அதிகமான தொழிலாளர்கள் பங்கு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.
இறந்த தொழிலாளர் கருப்பையாவின் துணைவியார் சோலையம்மாளுக்கு தமிழக அரசு தொழிலாளர் துறை வழியாக வழங்கிய ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொகையை பெறுக் கொண்ட அவர்
தமிழகமுதல்வருக்கும்,தொழிலாளர் துறை அமைச்சருக்கும் நன்றி கூறினார். முன்னதாக திருவாரூர் மாவட்ட எஸ் சி, எஸ் டி பிரிவு மாவட்ட தலைவர் ரவி அனைவரையும் வரவேற்று பேசினார்,
இந்நிகழ்வில் சுரேஷ் வாண்டையார், செல்வம், காஜா உசேன் உள்ளிட்டோர் மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.