எஸ் செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி
சீர்காழி சுற்று வட்டார பகுதியில் பரவலாக விட்டு விட்டு கனமழை தீபாவளி பண்டிகையை ஒட்டி தர கடை அமைத்த வியாபாரிகள் பாதிப்பு
கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், புத்தூர், ஆச்சாள்புரம், திருவெண்காடு, பூம்புகார் ,அகனி, காத்திருப்பு, கொண்டல், மேலச்சாலை, புங்கனூர், பழையார்,திருமுல்லைவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்த நிலையில் அதிகாலை முதல் தற்போது வரை பரவலாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பழைய பேருந்து நிலையம் அருகே தீபாவளி பண்டிகையை ஒட்டி நூற்றுக்கு மேற்பட்ட தரக்கடை வியாபாரிகள் அமைத்த பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.மழையால் தரக்கடையை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு