கோவையில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புத்துணர்வான அறிவு இயக்கம் தற்போது கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாற்றத்தை வழி நடத்துவது, இந்தியாவின் முதல் மனித நுண்ணறிவு ஆலோசனை நிறுவனம் “ஆறுச்சுடர்” , அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிகா நேதாஜி. ஆஷிகா நேதாஜி மற்றும் அவரது குழு சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள முன்னணி கல்லூரிகள், KPR Arts & Science College, Sakthi Engineering college, Kathir Engineering College, Mahalingam Engineering College, NGP College, Park College, CIT, PSG உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து, Aaruchudar நிறுவனம் நடத்தவிருக்கும் இந்தியாவின் முதல் “Brain GPT – Human Intelligence Workshop”குறித்து விவாதித்தனர்.
நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிகா நேதாஜி கூறியதாவது:
“நாம் ஏற்கனவே AI யை கற்றுக்கொண்டு வருகின்றோம். ஆனால் மனித மூளை எப்படி முடிவெடுக்கிறது, உணர்ச்சி மேலாண்மை எப்படி நடக்கிறது, சிந்தனை எப்படி உருவாகிறது என்பதைக் கற்றுக் கொடுப்பதே ஆறுச்சுடரின் குறிக்கோள். கோவையிலிருந்து இந்தியா உலகளாவிய ‘Human Intelligence Hub’ ஆக மாறும்.”
இந்த மூன்று நாள் பட்டறை அக்டோபர் 16 முதல் 18 வரை KPR Arts & Science College வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு கோயம்புத்தூரை உலகின் மூன்றாவது ‘மனித மூளை செயல்பாட்டு திட்டம்’ தொடங்கும் நகரமாக மாற்றவுள்ளது என்பது பெருமைக்குரியது.
இந்த நிகழ்ச்சியில் கல்வி, தொழில்நுட்பம், மற்றும் நிறுவனத் தலைவர்கள் என பல்வேறு துறைகளிலிருந்து முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். ஆறுச்சுடர் குழுவின் நோக்கம் – “Artificial Intelligence வளர்ந்தாலும், Human Intelligence தான் வழிநடத்த வேண்டும்” என்ற கருத்தை நிஜமாக்குவது.
இந்த நிகழ்ச்சியின் முக்கியக் கருத்துக்கள்:
Brain Activation Modules — மாணவர்களின் மூளைச் செயல்பாட்டை தூண்டும் பிரயோகங்கள்
Decision Making Labs — தெளிவு, தன்னம்பிக்கை, தீர்மானத் திறன் வளர்த்தல்
Leadership Without Imitation — பின்பற்றாமல் வழிநடத்தும் தலைமை திறன் உருவாக்கம்
AI + Human Balance Model — Artificial Intelligence உடன் மனித நுண்ணறிவை சமநிலைப்படுத்தும் பயிற்சிகள்
Career and Employability Labs — நவீன வேலைவாய்ப்பு உலகில் தேவையான மனக்கட்டமைப்பை உருவாக்குதல்
இந்த முயற்சியின் மூலம் ஆறுச்சுடர் நிறுவனம், மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அல்லாது, அறிவையும், உள்ளுணர்வையும், நுண்ணறிவையும் இணைக்கும் ஒரு புதிய கல்வி முறைமை கொண்டு வர முனைந்துள்ளது.