கொம்பாக்கத்தைச் சேர்ந்த 66 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார் !
நீண்ட வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த கொம்பாக்கத்தைச் சேர்ந்த 66 குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, புதுச்சேரி நகராட்சி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட செங்கேணி அம்மன் கோவிலுக்கு சொந்தமான மாந்தோப்பு, கொம்பாக்கம்–வில்லியனூர் மெயின் ரோடு, சிமெண்ட் களம், ஒட்டாம்பாளையம் மற்றும் செட்டிக்களம் சாலைகளில் வசிக்கும் 66 ஏழை குடும்பங்களுக்கு அரசின் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் நீண்ட வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த இலவச வீட்டு மனைப்பட்டாவை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நில அளவை பதிவேடுகள் துறை தாசில்தார் சந்தோஷ், வருவாய் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.