கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகரான சூர்யா,அவரது ரசிகர்களுக்கு
கோவையில் தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்..
அதன் படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி அவர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினர்..
கோவை இரயில் நிலையம் எதிரில் உள்ள சாந்தி திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார்..
இதில் சிறப்பு அழைப்பாளராக சாந்தி திரையரங்கின் மேலாளர் சாத்தையன் கலந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் விஜய்,பகவதி,கிரி,சேனாதிபதி,சுதாகர்,வடவள்ளி யோகேஷ்,பிரகாஷ்,மாவட்ட மாணவரணி தலைவர் பூபதி,மேற்கு நகர தலைவர் சஞ்சய்,தொண்டாமுத்தூர் ஒன்றிய தலைவர் அமர்நாத்,கோவைபுதூர் பகுதி தலைவர் திலக்,மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்…