மதுரை
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் ஆணைக்கிணங்க,மாநிலச் செயலாளர் எம்.சுமன் தேவர் தலைமையில், மதுரை மாவட்ட தலைவர் பி.எம்.ராஜாமாறன் ஏற்பாட்டில்,மாலை அணிவித்து
மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சுதந்திரப் புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தத்தனேரி கார்த்திக் மற்றும்
நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் தர்மராஜ்,ரத்தினவேல் பாண்டியன்,
மகாபிரபு,அருண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.