திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி எனும் பகுதியில் இருந்து பழனிக்கு தொலைவில் உள்ள பெரியகலையமுத்தூர் பகுதியில் உள்ள அம்மாபட்டியான் திருக்கோவிலுக்கு சென்ற நேரத்தில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு ஏற்பட்ட காரணத்தினால் சாலை சேதும் சகதியுமாக இருந்த நிலையில் அவர் கொண்டு வந்த நான்கு சக்கர மாருதி வாகனம் சகதி மற்றும் களிமண்ணில் சிக்கிக் கொண்டுள்ளது.
உடனடியாக அவர்கள் பழனி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலைத் தொடர்ந்து உடனடியாக பழனி தீயணைப்பு மீட்புக் குழு அப்பகுதிக்கு சென்றது. தீயணைப்பு வாகனமே செல்ல முடியாத அளவிற்கு அப்பகுதி மிகவும் சேரும் சகதியமாக இருந்தது பின்பு கயிறு மூலம் அந்த வாகனத்தை இழுத்து யாருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக குடும்பத்தை மீட்டனர். தீயணைப்புத் தொழிலாளர்களின் இந்த வீர செயல்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.