போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு நகர்மன்றத் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை இனிப்புகளை நகராட்சி நகரமன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி மேலாளர் ஜலால் பொறியாளர் குணசேகரன் முன்னாள் நகராட்சி நகர் மன்ற தலைவர் எம் சங்கர் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் திருப்பதி சபீர் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் உள்பட நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.