சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவையில் ஜேசிஐ கோயம்புத்தூர் கிளாசிக் (JCI Coimbatore Classic) அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் ஆளுமைகளைக் கௌரவிக்கும் “விஷனரி லீடர்ஸ் அவார்ட் 2026” (Visionary Leaders Award 2026) விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் விஜய் பார்க் இன்னில் நடைபெற்ற இந்த விழாவிற்கு,
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சன் டிவி ஃபிட்னஸ் நிபுணர் டாக்டர் ஜெயா மகேஷ் மற்றும் தேசிய பயிற்சியாளர் ஜேசி HGF சூர்யா ஆகியோர் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர் , பின்னர் அவர்கள் பேசும் போது இன்றைய காலகட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து பேசினர்.
மன நலம், சமூக சேவை, தொழில்முனைவு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் ஜெயா மகேஷ் பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்து கொண்டு, வாழ்க்கையில் வரும் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வில் ஜேசிஐ முன்னாள் தலைவர் JFM நடராஜன், ஜேசிஐ கோயம்புத்தூர் கிளாசிக் தலைவர் ஜேசி அந்தோ பிராங்க்ளின், செயலாளர் ஜேசி ஜெயகிருஷ்ணன், பொருளாளர் ஜேசி விஸ்வேஸ்வரன், லேடி ஜேசி தலைவர் டாக்டர் சௌந்தர்யா, செயலாளர் ஜேசி ஷில்பா உள்ளிட்ட ஜேசிஐ உறுப்பினர்கள் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
அன்னம் கேட்டரிங் மற்றும் தைசெல்ஃப் பாக் பிளவர் தமிழ்நாடு (Thyself Bach Flower Tamil Nadu) நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த விழாவில், ஏராளமான மகளிர் மற்றும் ஜேசிஐ உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.