திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பா.சீனிவாசன், முகமது அப்துல்லா, எ.தேவா, துணை செயலாளர் க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க துணைச் செயலாளர் சா.ரஷீனா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, பட்டிமன்ற பேச்சாளர் மா.மோகனாம்பாள் பங்கேற்று, சங்க இலக்கியங்களில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் ஔவையார், காக்கை பாடினியார், வெள்ளிவீதியார் உள்ளிட்டோர் இலக்கியங்களில் தமிழ் மட்டுமே வளர்க்காமல் வாழ்வியல் சிந்தனைகளையும் வளர்த்தனர் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை ஆ.சித்ரா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

மேலும் ‘தமிழை கொண்டாடுவோம்’ பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பெ.பார்த்திபன், சீ.கேசவராஜ், அ.ஷாகுல் அமீது, ஜா.தமீம், இரா.அருள்ஜோதி, ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், ஆ.முரளி, பா.ஸ்ரீமந்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, தமிழ் ஆர்வலர் கு.சதானந்தன், திரைப்பட இயக்குநர் விஜய் ஆதிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை சங்க செயலாளர் இரா.பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். முன்னதாக ஊடகவியலாளர் வங்கை சு.அகிலன் தமிழிசை பாடல்களை பாடினார். இறுதியில் சங்க துணை தலைவர் வந்தை பிரேம் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *