ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பண்பாளர் கம்பம் என்.இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் மாநில கழக தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயகுமார், மாநில கொள்கைபரப்பு துணைச் செயலாளர் இரா.பாண்டியன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசையன் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *