தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சிகிச்சை பலனின்றி வாலிபருக்கு உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் மணிகண் டன் (வயது 34). ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். மணிகண்டன் தற்போது குடும்பத்துடன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டினம் பாப்பையன் புதூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை சேர்ந்தவர் ரவீந்திரன் (35). இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு கீர்த்தனா, யுவஸ்ரீ (15) என 2 மகள்கள் உள்ளனர்.

கொடைக்கானலில் இருந்தபோது, மணிகண்டன் குடும்பத்துக்கும், ரவீந்திரன் குடும்பத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போது, ரவீந்தி ரன் தாராபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். யுவஸ்ரீ அந் தப்பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி யுவ ஸ்ரீயை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். குண்டடம் அருகே உள்ள முத்தூர் பிரிவு பகுதியில் வைத்து 2 பேரும் திடீரென தாங்கள் வைத்திருந்த விஷமாத்திரை தின்று மயங்கி கிடந்தனர். இதுகுறித்து அறிந்ததும் தாராபுரம் போலீசார் அங்கு சென்று, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்த போது மாணவி யுவஸ்ரீ வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மணிகண்டனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *