செய்தியாளர் சுப்பராயர் மேஸ்திரி
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்தி மிக்க சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
ஐயப்பன் பிறந்த நாளாகக் கருதப்படும் பங்குனி உத்திரம் தினமான நேற்று, காலை முதலே ஆலயத்தில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாலை 7 மணியளவில் ஐயப்பனுக்கு ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, ஐயப்பனை வழிபட்டு ஆனந்தமடைந்தனர்.
இந்நிகழ்ச்சியை உத்திர நட்சத்திரம் குழு மற்றும் புதுவை மாநில சபரிமலை ஐயப்ப சேவா சமாஜமும் இணைந்து நிகழ்ச்சியை செய்திருந்தன