
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு தேவையான சமூக நல பணிகளை மிக சிறப்பாக செய்து வருகின்ற இந்து சேனா தேசிய பேரியக்கம் புதுடெல்லியின் தலைமையின் ஆலோசனை படியும், மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் அ.தி.மு.க தலைமைக்கு ஆதரவு கடிதத்தை இந்து சேனா இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் வழங்கினர்.
இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநில தலைவர் அருள்வேலன் ஜி அதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக மக்களின் தேவைகளை அறிந்து அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கினார்.மிக முக்கியமாக உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் கொத்து கொத்தாக உயிர் இழந்த காலகட்டதில் உடனே தகுந்த அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுத்து தமிழக மக்களை காப்பாற்றிய அரசு அண்ணன் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு மேலும் அவர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டுள்ளார்.
ஆகவே வருகின்ற 2026-சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று எங்கள் இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் ஆதரவை தெரிவித்துள்ளதோடு அனைத்து சட்டமன்ற தொகுதிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எங்கள் இந்து சேனா தேசிய இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு வகையான களப்பணியாற்றி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வோம் என தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கோவை செந்தில்குமார், சென்னை மாவட்ட தலைவர் பழனிவேல் , வேலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன்,சென்னை தீனதயாளன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.