ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 661 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக் குழுக் கடனுதவி, உழவர் பாதுகாப்பு நலத்திட்டம் என ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் வ.காந்திராஜ் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ந.ப்யா தலைமை தாங்கினார்.

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்றைய நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் சார்பில் 634 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.5.76 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத் துறையின் சார்பில் 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டிலான கடனுதவி ஆணைகள் என மொத்தமாக 661 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. அரசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான மக்களாட்சியில் உழவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, உறுதுணையாக இருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதேபோன்று பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் சிங்கப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு இடைத்தரகர் இல்லாமல் நமக்கான நலத்திட்டங்களை அரசின் மூலம் பெற முடிகிறது. முன்பெல்லாம் அரசு அலுவலரையோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையோ பார்க்க வேண்டுமாயின் ஒரு இடைத்தரகர் இருப்பார். ஆனால் தற்பொழுது அதெல்லாம் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் அரசு அலுவலரையோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையோ சந்தித்து உங்களின் பிரச்சனைகளை எவ்வித சிரமமின்றி தெரிவித்து பயன்பெறலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கெல்லாம் ஒரு நற்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கூட்டுறவுத் துறையின் மூலம் பொதுமக்கள், விவசாயிகள். பெண்கள் பயனடையும் வகையில் ஏராளமான திட்டங்கள் உள்ளது. ஆகவே பொதுமக்கள் அருகிலுள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று, உங்களின் கோரிக்கைகளையும். தேவைகளையும் தெரிவியுங்கள் உங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க அலுவலர்கள் தயாராக உள்ளனர். இதுபோன்ற நற்வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்தவொரு கமிஷனும் கரப்ஷனும் இல்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வித தங்குதடையின்றி, பெறுகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூடிய விரைவில் அறிவிப்பார் என மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.பேபி இந்திரா. வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் செல்வம், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன், வட்டாட்சியர் வரலட்சுமி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *