ஈரோட்டில் எழுந்த கருப்புப் புரட்சி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆவேசம்!
மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசின் ” தொகுதி மறுவரையறை
திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டக் குரல்கள் வலுத்து வருகின்றன. தென்னிந்தியாவின் உரிமைகளைப் பறிக்கும் இந்த முயற்சியைக் கண்டித்து,திமுக – காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் இன்று மாபெரும் கருப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸின் வெற்றி வேட்பாளர் திரு. கோபிநாத் பழனியப்பன் அவர்கள், இன்று காலை 7 மணியளவில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன், மத்திய அரசுக்கு எதிராகக் கருப்புக்கொடி ஏந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.