முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு அஇபுதமமுக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டாக்டர் ராம்குமார் மறவ கரிசல்குலம், உசிலங்குலம், வாகைகுலம்
மற்றும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், முதுகுளத்தூர் தொகுதி பல ஆண்டுகளாக வளர்ச்சி பணிகளில் பிந்தங்கி இருப்பதாகவும், தன்னை வெற்றி பெறச் செய்தால் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வடிகால், பள்ளிகள் மேம்பாடு, விவசாயிகளுக்கு தேவையான நீர்வள திட்டங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு மைதான வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறினார்.
இதையடுத்து டாக்டர் ராம்குமார் மற்றும் அவருடன் சென்ற கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் ஆதரவு கோரி வாக்கு சேகரித்தனர். அப்பகுதி மக்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த பிரச்சார நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு டாக்டர் ராம்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நிருபர் ஆர் செந்தில்குமார்