கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்


சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி …

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன கட்டுப்பாட்டில் தூண்பாறை
பைன்மரக்காடுகள் மேயர் சதுக்கம் குணாகுகை போன்ற சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு வனத்துறை சார்பாக பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் காரணமாக தினந்தோறும் சுமார் 7 கிலோமீட்டர் மேல் வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருக்க வேண்டிய சூழல் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது

இதனை மாற்றி பழைய முறைப்படி அந்தந்த சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் பலமுறை வனத்துறைமற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரைக்கும் எடுக்காத காரணத்தால்
இன்று கொடைக்கானல் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஒன்று திரண்டுதங்கள் வாகனங்களை சோதனை சாவடியில்நிறுத்தி பழைய முறைப்படி அந்தந்த இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


இதன் காரணமாக கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சாலையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது


மேலும் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சூழல் தற்போது ஏற்பட்டு வருகிறது
எனவே வாகன ஓட்டிகள்மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பழைய முறைப்படி அந்தந்த சுற்றுலாத் தலங்களில்நுழைவு கட்டணங்களை பெற வேண்டும் என்று கோரிக்கை தற்போது எழுந்து வருகிறது


மேலும் தொழிலாளர் தினத்தன்று கொடைக்கானலில் உள்ள அனைத்து ஓட்டுநர்தொழிலாளர்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அரசு அதிகாரியிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *