ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது
புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில மகளிரணி , இளைஞரணி, மாணவரணி மற்றும் சில அணிகள் அறிவிக்கப்பட்டு மாநில அணிகளின் கமிட்டிகளும் போடப்பட்டது. அதில் மகளிரணி தலைவி வாசுகி தலைமையில் மகளிரணி நிர்வாகிகள் பட்டியலும், இளைஞர் அணிக்கு ராஜா தலைமையில் இளைஞரணி நிர்வாகிகளும் , மாணவரணிக்கு ஆண்டுரூ தலைமையில் மாணவரணி நிர்வாகிகளும் அறிவிக்கப் பட்டனர்.
அதனை தொடர்ந்து பதினேழு தொகுதிகளுக்கும்பெண்களுக்கு முப்பது சதவீதம் ஒதுக்கப்பட்டு தொகுதி தலைவர்களும் நிர்வாகிகளும் அறிவிக்கப் பட்டனர் . இதில் ஏனாம் தொகுதியும் அடங்கும். இந்த கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்பட்டது என்பதனை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. சில பேர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தினாலும் மேலும் சில பேர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல் பட்டதாலும் , கட்சியின் எதிர் கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அனைத்து கமிட்டிகளும் முழுமையாக கலைக்கப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் விரைவில் புதிய கமிட்டிகள், தகுதியான அணி தலைவர்களும் , தொகுதி தலைவர்களும் விரைவில் அறிவிக்கப் படுவார்கள் மாநில நிர்வாகிகளின் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்.என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
RLV மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.