மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள். யார் மீது நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு குடோனுக்கு அரிசி கோதுமை. துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைப்பார்கள். பொருட்களை அந்தந்த குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டு அதன்பின்பு அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொருட்களை அனுப்பி வைப்பார்கள். அதன்படி தூத்துக்குடி டவுன் பகுதிக்கு ஜார்ஜ் ரோட்டில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தூத்துக்குடி டவுன் குடோன் உள்ளது.
இந்த குடோனில் இருந்து தான் தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அதன்படி இந்த குடோனுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட லாரிகளில் வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிசி. கோதுமை லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு குடோன் முன்பு 20க்கும் மேற்பட்ட லாரிகள் பாதி தார்ப்பாய்கள் மூடப்படும் மூடாமலும் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி நகர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக லாரிகளில் உள்ள மூடைகள் மழையில் நனைந்து உள்ளது.
இரண்டு நாட்களாக லாரிகள் குடோன் முன்பு ரோட்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் லாரியில் உள்ள அரிசி கோதுமைகளை இறக்குவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை தொடர்ந்து பெய்து வரும் மழையில் லாரியில் உள்ள அரிசி கோதுமை மூலைகள் நனைந்து வருகிறது ஏன் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மழையில் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை இது பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை மூலம் வழங்கும்போது அந்தப் பொருட்களை அதுவும் உணவுப் பொருட்கள் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.
இது பற்றி முன்னாள் அரசு வழக்கறிஞரும் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் யூ எஸ் சேகர் கூறுகையில் தூத்துக்குடி நகர் பகுதிக்கு சொந்தமான தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு குடோன் ஜார்ஜ் ரோட்டில் உள்ளது கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் மழை பெய்து வருகிறது
நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு வழங்குவதற்காக லாரி மூலம் கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள் லாரியில் பாதி தார்ப்பாய் மூலம் மூடப்படும் பாதி மூடாமலும் மலையில் உணவுப் பொருட்கள் அரிசி கோதுமை நனைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது
பல லட்ச ரூபாய் இதன் மூலம் இழப்பு ஏற்படுகிறது இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக தலைமைச் செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இழப்பீடு தொகை வசூலிக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
பொதுமக்களுக்கு உணவு பொருட்களாக உள்ள அரிசி கோதுமை கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன்பு லாரியில் மழையில் நனைந்து கொண்டு இருப்பது பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டே இப்படி ஏன் அதிகாரையில் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே செல்கிறார்கள்
சாதாரண ஏழை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருளான அரிசி கோதுமை பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இரண்டு நாட்களாக குடோனில் இறக்கி வைக்காமல் லாரியில் மனழயில் நனைந்து கொண்டு வைத்திருப்பது அதிகாரிகளுக்கு இறக்குவதற்கு மனம் இல்லையா இப்படிப்பு நனைய வைத்து கெட்டுப் போன உணவுப் பொருட்களை தான் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.