பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் ….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ நாச்சியம்மன், ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய 13-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி மண்ணியாறு ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள்
வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர் அதனை தொடா்ந்து, ஸ்ரீ நாச்சியம்மன் ,படைவெட்டிமாரியம்மனுக்கு பால் அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது.

விழாவில் கீழமாஞ்சேரி கிராமவாசிகள்,இளைஞர் நற்பணி மன்றம் , மற்றும்,திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசித்து வழிப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *