திருவாரூர்., மே.17

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் தனியார் திருமண அருகில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து. ராஜா கூறும்போது…

கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளைதான் மோடி அரசாங்கம் பின்பற்றுகிறது. தொழிலாளர்கள் விவசாயிகள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

அவர்களது நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. பொருளாதாரமே இன்றைக்கு ஒரு நாசகரமான நிலையில் நிற்கிறது. ரூபாயினுடைய மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய இளைஞர்களினுடைய எதிர்காலம் இருள் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. வேலை இல்லாத திண்டாட்டம் பெருகி வருகிறது.

விலைவாசி உயர்ந்து வருகிறது. மக்களிடம் போதுமான வாங்கும் சக்தி இல்லாத நிலை இருக்கிறது. நேற்று ஒன்றிய அரசு டீசல் பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதை எங்களுடைய கட்சி வன்மையாக கண்டனம் செய்திருக்கிறது. இதனை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர காரணம் மோடி பின்பற்றுகிற தவறான கொள்கைகள். மோடி அரசு நம்முடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது. எரிபொருளை நாம் ரஷ்யாவிடமிருந்து எண்ணையை வாங்க வேண்டுமா..? கூடாதா..? என்பதை ஆணையிடுகிற நிலைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் போயிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் அதனை செய்து கொண்டிருக்கிறார். அதனை எதிர்த்து பேசுவதற்கு துணிவில்லாத ஒரு பிரதமராக மோடி இருக்கிறார்.

நம்முடைய நாடு பின்பற்றி வந்த வெளியுறவு கொள்கைகளை எல்லாம் இன்றைக்கு டொனால்ட் ட்ரம்பிடம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைய வைத்திருக்கிறார் திரு மோடி என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஈரான் போர் எப்பொழுது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. அது மேற்காசிய பகுதியோடு நிற்குமா அல்லது தெற்காசிய பகுதி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா இப்படி உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய ஒரு போராகுமா என்ற அச்சம் கூட ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் ஈரான் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்கள் மீது ஈரான் இஸ்ரேல் நடத்தி வருகிற தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த டீசல் பெட்ரோல் விலை உயர்வு மக்களை பெருமளவிற்கு பாதிக்கக்கூடியதாக உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் எல்பிஜி எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்ததற்கு பின்னர் டீசல் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

இது மக்களின் மீது கொடுக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய தாக்குதல். மோடி அரசாங்கம் இந்த விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும். மக்களுடைய வாழ்வாதாரங்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மோடி வாய்ச்சவடால் விடுகிறார். “சப்கா சாத், சப்கா விகாஸ்”. எல்லோருக்குமான அரசு எல்லோருக்குமான திட்டங்கள் என்று கூறுகிறார். ஆனால் நடைமுறையில் மோடியினுடைய திட்டங்கள் மோடியினுடைய ஆட்சிமுறை என்பது முதலாளிகளுக்கான ஒன்றுதான். பெரும் முதலாளிகளுக்கான ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேவேண்டும்

ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும், எல்லா மாநிலங்களிலும், எல்லா மாவட்டங்களிலும், மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என்று கட்சி முடிவெடுத்திருக்கிறது. ஆகஸ்ட் ஆறிலிருந்து 15 வரை பாதயாத்திரைகள் நடத்தப்படும்.

ஆகஸ்ட் ஆறிலிருந்து ஆகஸ்ட் 15 வரை இது ஒரு பெரும் அரசியல் இயக்கமாக, நாடுதழுவிய இயக்கமாக எங்களுடைய கட்சி நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் இந்த இயக்கம் நடைபெறும். இதனை தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி டெல்லியில் ஒரு மாபெரும் பேரணியை நடத்துவதற்கு எங்களுடைய கட்சி முடிவு செய்திருக்கிறது.

பிரதமர் சொல்லும் சிக்கன நடவடிக்கைகள் எள்ளி நகையாடக்கூடிய நடவடிக்கைகளாக இருக்கின்றன. தங்கத்தை வாங்காதீர்கள் என்கிறார். தங்கத்தை வாங்குகிற மக்கள் எத்தனை சதவீதம் என்று பிரதமர் சொல்ல தயாரா? என நான் கேட்க விரும்புகிறேன்.

இன்றைக்கு வீட்டிலிருந்து பணியாற்றுங்கள் என்று சொல்லுகிறார். ஏற்கனவே ஐடி துறையில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுகிறார்கள். 24 மணி நேரமும் அவர்கள் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து பணியாற்றுகிறார்கள்.

ஆனால் கட்டிட தொழிலாளிகள் வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமா? சாலை கட்டமைப்பாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமா? தொழிற்சாலை தொழிலாளிகள் வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமா? விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமா? என்ன பேசுகிறார் பிரதமர்..? இது மக்களை எள்ளி நகையாடுவதாக இருக்கிறது.

எனவே பிரதமர் சொல்வது ஏற்புடைய கருத்துக்கள் அல்ல மோடி தோற்றுவிட்டார் என்று சொல்வதற்கு காரணம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொல்லுகிறார் ரஷ்யாவிலிருந்து எண்ணையை வாங்காதீர்கள் என்று.

அதை மோடி ஒரு வார்த்தையாவது எதிர்த்து பேசி இருக்கிறாரா? நாம் யோசிக்க வேண்டும். இப்போது வெனுசுலியா ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெனுசுலியாதான் உலகத்தில் மிகப்பெரிய எண்ணைவள நாடாக இருந்தது.

இப்போது அமெரிக்கா இன்றைக்கு வெனுசுலியாவை தாக்கியதற்கே அதான் காரணம். இப்போது ஈரான் யுத்தம் கூடாது என்று மோடி சொல்லி இருக்கிறார். இஸ்ரேலுக்கு மோடி போய் அங்கு இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்து வந்த ஒரு சில நாட்களில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்குகிறார்கள். இதுதான் இன்றைக்கு உலகத்தில் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி காரணம். எனவே ஈரான் போருக்கும் மோடி ஒருவகையில் உடந்தையாக இருந்தாரோ என்ற கேள்வி கூட வருகிறது.

ஏனென்றால் அவர்தான் போய் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவு இந்தியா தரும் என்று பேசுகிறார். இது எந்த காலத்திலும் நடந்ததில்லை. அதனால்தான் நம்முடைய வெளிவிவகார கொள்கைகளையே இன்றைக்கு தகர்த்து ஏகாதிபத்திய சக்திகளிடம் சரணடைகிற ஒரு அரசியல் நிலையை மோடி மேற்கொண்டிருக்கிறார் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறும்போது..கடந்த காலத்தில் ஆட்சி செய்த திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி காலத்தில் தான், இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களும் இல்லாத நலதிட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. அந்த நலதிட்டங்கள் தொடர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

இன்னும் கூடுதலான நலதிட்டங்களை புதிய அரசு தொடங்குமேயானால் அதையும் நாங்கள் வரவேற்போம். மக்களின் கோரிக்கைகள் பல கிடைப்பில் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் புதிய அரசு செவிமெடுத்து அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டுல கடந்த 60 வருடத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அதுபோன்ற ஒரு முயற்சி இல்லை. அதுபோன்ற ஒரு கொள்கை திட்டத்தை நாங்கள் ஒதுக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் பங்கேற்பதாக இருந்தால் குறைந்தபட்ச செயல் திட்டம் இருக்க வேண்டும்.

இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் 6 பேரும் வெளியிலிருந்து ஆதரிக்கிறோம். நல்லாட்சி தர வேண்டும். அரசின் அணுகுமுறை அதை பொறுத்து எங்கள் அணுகு முறைகள் அமையும். புதிய அரசு அமைந்து சில நாட்கள் தான் ஆகி இருக்கிறது. எனவே அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படும்.

எதிர்கட்சிகளின் அழுத்தத்தினாலதான் மகளிர் உரிமை தொகை ₹1000 வரவு வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு..எதிர்கட்சி அழுத்தம் தந்தாலும் எளிய மக்கள் பயனடைவார்கள். அரசே தானே சிந்தித்து இன்னும் அதிகமாக கொடுத்தாலும் எளிய மக்கள் பயன்படுவார்கள். எளிய மக்கள் பயன் பெறுவதற்கு நாங்கள் வரவேற்போம்.

அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ள சூழலில் சட்டம் சார் கடமை செய்யும் என்றார்..ஏற்கனவே இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டம் இருக்கிறது. இந்த கட்சி தாவல் தடை சட்டத்தில் பல்வேறு கூறுகள் இருக்கின்றன. சபாநாயகரே இதை பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கட்சி தாவல் தடை சட்டம் அதனுடைய கூறுகளை ஏற்று சபாநாயக்கர் என்ன முடிவெடுக்கிறார்? நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாம் இதுவரை பின்பற்றி வருகிற நடைமுறையில் இவற்றின் அடிப்படையில் என்ன முடிவெடுக்கிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நதிநீர் பிரச்சனையில் நதிநீர் பிரச்சனையில் தமிழகம் நீருக்கு எதிர்பார்த்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முடிவுகள் இருக்கிறது. எனவே தங்கு தடை இல்லாமல் எங்கள் உரிமையில் நாங்கள் இருப்போம். அவர்கள் தண்ணீர் எங்களுக்கு தேவையான போது திறந்து விட வேண்டியது அவர்களின் அரசியல் கடமை என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *