எண்ணூர் போலீசார் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகளை சிறிய சிறிய பாக்கெட்டுகளாக மடித்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையில் அதிரடியாக வீட்டில் உள்ளேன் சென்ற எண்ணூர் போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்

இதில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த வாணி 21, திருவல்லிக்கேணியை சேர்ந்த கலா 56, மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அருண்குமார் 27,
இம்மானுவேல் ராஜா 18 , அஜித் குமார் 31 ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இவர்கள் 5 பேரும் ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா,போதை மாத்திரை ஆகியவற்றை மொத்தமாக வாங்கி வந்து, அவற்றை சிறிய பாக்கெட்டுகளாக மடித்து விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.

இதில் கலா, அருண்குமார் ஆகியோர் மீது போதை பொருள் கடத்தல் அடிதடி கொலை முயற்சி போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. பிடிபட்டவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ, கஞ்சா, மற்றும் 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *