இன்று ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் மருந்து வணிகர்கள் பங்கேற்றனர். COVID-19 காலத்தில் அமல்படுத்தப்பட்ட வீட்டு விநியோகம் மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனை முறையை திரும்ப பெற வேண்டும் என்றும், போலி மருந்துகள் மற்றும் முறையற்ற தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை செய்தியாளர் சிவசக்தி யோகினி.