அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெற்கூர் நாயுடுஉறவின் முறை சங்கம் சார்பில் நாயுடு திருமண மண்டபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாநடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் முருகானந்தம்,செயலாளர்
ராஜேந்திரன், பொருளாளர் சேகர்,தலைமையிலும் இளைஞர் சங்கதலைவர் சந்திரன் செயலாளர்
லோகநாராயணன்,பொருளாளர் விஜய் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்கள் திமுக வடக்கு மாவட்டஅவைத் தலைவர் பாலசுப்பிரமணியன்,மற்றும் எம்ஆர்எம் முரளிதரன்,ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து பரிசு மற்றும் கேடயம், மேடல், ஆகியவற்றை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வீரப்பன் நன்றி கூறினார்.