கடலூர், மாவட்டம்

வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி ரங்கநாயகி ( 55,) முத்தாண்டிகுப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் சமையல் வேலை செய்து வருகிறார் கடந்த மே 13ந் தேதி பணியை முடித்துவிட்டுவடலூர் வந்தார், வடலூரில் மளிகை கடையில்மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொண்டு நடந்து
வீட்டிற்குசென்றார்
இவர் வடலூர் பாரதி சாலையில் உள்ள அருண் என்பவரது வீட்டின் அருகே சென்றபோது, அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ரங்க நாயகியிடம்
முகவரி விசாரிப்பது போல் பேசி, ரங்கநாயகி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க சங்கிலியைபறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக வடலூர் காவல் நிலையத்தில்ரங்கநாயகி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், நெய்வேலி துணைகாவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் சேகர், மாதேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு. தனிப்படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்,வடலூர் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் சண்முகம் செட்டியார் தெருவை சேர்ந்த ஜிபேர் மகன் அப்துல் கலாம் (எ) கிரி, (23), என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட அப்துல்கலாம் உடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான மயிலாடுதுறை சேகர் மகன்இளையராஜா (30), என்பவருடன் சேர்ந்து இந்த செயின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 132 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டி இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார். எனக் கூறப்படுகிறது.