தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் தலைமையில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியான பூக்கடை . மகேந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்ட மகேந்திரனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா முன்னாள் எம்எல்ஏ பல்லாவரம் ப.தன்சி ங், கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் மலர்மன்னன், மாவட்ட கழக பொருளாளர் பி.கே.பரசுராமன், மாவட்ட கழக இணைச்செயலாளர் வனஜா, தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்.ஆர்.செழியன், தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் எம் கூத்தன்,மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஏ.கோபிநாதன், மாடம்பாக்கம் பகுதி கழக செயலாளர் எம்.தேவேந்திரன் சிட்லபாக்கம் பகுதி கழக செயலாளர் இரா.மோகன், பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் சீனுபாபு, பல்லாவரம் பகுதிகழக செயலாளர் த.ஜெயபிரகாஷ், அனகாபுத்தூர் பகுதி கழகச் செயலாளர் பி.வேலாயுதம், குரோம்பேட்டை பகுதி கழக செயலாளர் எம்.கே.சதீஷ், அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர் ஆர்.அருணாச்சலம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக அனைத்து அணி நிர்வாகிகளும் பகுதி கழக நிர்வாகிகளும் வட்டச் செயலாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்