தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 402 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 402 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் தேனி தாலுகாவைச் சேர்ந்த 15 நபர்களுக்கும் பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 20 நபர்களுக்கும் ஆண்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த 11 நபர்களுக்கும் போடிநாயக்கனூர் தாலுகாவைச் சேர்ந்த 10 நபர்களுக்கும் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 45.900 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 31.500. மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும் மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூபாய் 77.490 மதிப்பிலான உதவி உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் முன்னேற்பாடு ஆயத்தப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் பொது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கதிர்வேல் நிலம் மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா தனித்துணை ஆட்சியர் கவிதா சா.
ப.தி. உதவி ஆணையர் பஞ்சாபகேசன் கலால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் ஜெகதீஷ் குமரேசன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஏ. எடிசன் தாசில்தார்கள் ஆண்டிபட்டி சந்திரசேகரன் தேனி மருதுபாண்டி பெரியகுளம் ஜாஹிர் தேனி மருதுபாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.