ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
பொம்மிடி, ஜூன் 10:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்தி, வருகிற 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணியளவில் பொம்மிடி ரயில் நிலைய நுழைவாயில் அருகே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பொ. மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், பொம்மிடி – வீராட்சியூர் – ஏற்காடு சாலை அமைக்க வேண்டும் என்றும், பொம்மிடி – காளிக்கரம்பு – தர்மபுரி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுங்கரஅள்ளி – வத்தல்மலை சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.
பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு நாம் தமிழர் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத்தலைவர் பா. ஜெபசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.