புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேனாள் நீதியரசர் மாண்புமிகு சேது.முருகபூபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நோக்கவுரை ஆற்றினார்.

புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன்தாசு ஆண்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை வாசித்தார். பொதுக்குழுவில் தேர்தல் ஆணையராக வழக்கறிஞர் முனைவர் க.பிரபாகரன் நியமிக்கப்பட்டார். பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட வாழ்நாள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு,துணைச் செயலர் தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன், கலைமாமணி எம்.எஸ்.ராஜா, பொறிஞர் மு.சுரேஷ்குமார், அ.சிவேந்திரன், இர.ஆனந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் தமிழ்ச் சங்கப் பொருளர் மு.அருள் செல்வம் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *