மதுரை பசுமலையில் செயல்படும் RISE -ரவி சிறப்புக் கல்வி நிறுவனம் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர்.
மதுரை ஆண்கள் எறிபந்து அணி, 2026 அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான எறிபந்து போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் RISE அணி மதுரை மாவட்டத்தின் சார்பாகப் பங்கேற்றது. தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களும் பங்கேற்ற இப்போட்டியில், இறுதிப் போட்டியில் சேலம் மாவட்ட அணியை எதிர்கொண்டு, இப்பள்ளி அணி மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இந்த அணியின் ஏழு வீரர்களும் தங்களுடைய விளையாட்டுத் திறன், குழு ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு மனப்பான்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தி, RISE நிறுவனத்திற்கும் மதுரை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்
இந்த அணியை வழிநடத்திய ரவிக்குமார், நிம்பா திமோத்தி மற்றும் எஸ்தர் ராணி ஆகியோரின் வழிகாட்டுதலும் ஊக்கமும் இந்தச் சாதனைக்குப் பெரும் பங்காற்றின.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான ஆண்கள் எறிபந்து போட்டியில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று வருவது RISE அணியின் தொடர்ச்சியான சாதனையாகும். இது நமது வீரர்களின் விடாமுயற்சி, ஒற்றுமை, கடின உழைப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சியின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
RISE நிறுவனம் ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரின் தனிப்பட்ட திறன்கள், ஆர்வங்கள் மற்றும் ஆற்றல்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கேற்ற வகையில் சிறப்புக் கல்வி, விளையாட்டுப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மூலம், ஒவ்வொரு மாணவரும் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையுடனும் சுயசார்புடனும் வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை RISE உருவாக்கி வருகிறது.
RISE நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், நமது மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களது திறமைகளை வெளிக்கொணர்வதற்கும்
, ஆதரவு, ஊக்கம், வழிகாட்டுதல் மற்றும் நம்பிக்கை ஆகியவை மிகவும் அவசியமானது.
ஒவ்வொரு வீரருக்குள்ளும் ஒளிந்திருக்கும் திறமையை அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை உருவாக்கி, தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியமாகும்.
விளையாட்டு என்பது வெறும் வெற்றி, தோல்வியைத் தாண்டி, தன்னம்பிக்கை, ஒற்றுமை, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனவலிமையை வளர்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். அதேபோல், சிறப்புக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ்வதற்கான அடித்தளமாக அமைகின்றன. இத்தகைய வாய்ப்புகளை நமது மாணவர்களுக்கும் வீரர்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்துகிறது.