நாகப்பட்டினம்,ஜூன்.18-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் பல 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மருளாளிகள் கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிந்து நேற்று விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து காலை கடங்கள் புறப்பட்டு மூலவர் குடமுழுக்கு வெகு விமர்சியாக நடைபெற்றது.
அதை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் மருங்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.