முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள்-துறையூரில் தவெக சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம்
துறையூர் மார்ச் -22
திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஜெகன் மோகன் ஆலோசனையின் படிமுதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளை (ஜீன்-22) முன்னிட்டு 21/06/2026 அன்று, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி மற்றும் குட்ட கரையில் உள்ள மருதா மருத்துவ மனையில் மருத்துவ முகாம், அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு ஒரு சிறுமிக்கு முதுகு தண்டுவட பிரச்சினைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தார்.இதில் நகர செயலாளர்கள் வினோத், சூர்யா, தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் வழக்கறிஞர்கள் அணி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நிர்மல், தொகுதி பொறுப்பாளர் நாகராஜ்,ஜீவல் சதா, வழக்கறிஞர்கள் செல்லதுரை, ஜெயபால், விக்னேஷ் மற்றும் சௌந்தரராஜன், போக்குவரத்து தொழிற்சங்கம் செந்தில்குமார்,மருத்துவ குழுவினர் மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர, நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்