தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மூங்கில் மடுவு ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதி இன்றி தவித்து வருவதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சட்டத் தூண்கள் அறக்கட்டளை இயக்கம் உதவியோடு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
பின்ன செய்தியாளர்களை சந்தித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது எங்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி எதுவுமே இல்லை ரொம்ப பாதிக்கப்படுகிறோம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, வீட்டு உபயோகிக்கப்படும் சிலிண்டர் எடுக்க முடியவில்லை எல்லாமே எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. நோயாளிகளை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை பிரசவத்திற்கு கூட கொண்டுட்டு போக முடியாத நிலை நாங்க கட்டில் போட்டு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
25 ஆண்டுகளாக எந்த வசதிகளும் செய்து தரவில்லை, எங்க ஊரை மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ஏற்கனவே 100 வீடுகள் இருந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் 50 வீடுகளில் வசித்த மக்கள் வெளியேறி போய்விட்டனர்.
நாங்க இப்போ ஐம்பது வீடுகள் வசிக்கும் மக்கள் மட்டுமே இருக்கிறோம், எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து எங்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் எங்களுடைய அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு ஊரைவிட்டு செல்கிறோம் என தெரிவித்தனர்.