மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி ஜூன் 22 ,
தென்காசி இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.பி ஓவியக்
கழகத்தைச் சார்ந்த 52 மாணவர்கள் 52 திருஉருவங்களை பல்வேறு வண்ணங்களில் ஓவிய ஆசிரியர் கணேசன் வழிகாட்டுதலில் வரைந்து காட்சிப்படுத்தினார்கள்.
நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் ,
உதவித்தலைமை ஆசிரியர்கள் சித்திரை சபாபதி , சொர்ண சிதம்பரம், செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.என் சி சி அலுவலர் செந்தில் பாபு வரவேற்றார். பள்ளி இறை வணக்கத்தின் போது பள்ளியில் படிக்கும் 1750 மாணவர்களும் வாழ்த்து கூறினார்கள்.
முதல்வரின் படம் வரைந்த மாணவர்களை செயலாளர் ஐ சி சண்முகவேலாயுதம்
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேசிய நல்லாசிரியர் முத்தையா உள்ளிட்டோர் வாழ்த்தினார்கள்.ஆசிரியர் முருகேசன் அனைவருக்கும் பேனா பரிசளித்தார் . சாரணர் இயக்கம் கிருஷ்ணம்மாள்சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பார்வையாளர்களை வியக்கும் வண்ணத்தில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.