செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்.எண்டத்தூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் விழாவையோட்டி கட்சியினர் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக கட்சியின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.பாலாஜி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டுனர்.
இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளில் 52 மரக்கன்றுகள் பொது மக்களுக்கு கொடுத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் சோழன், ஊராட்சி செயலாளர் பிரபாகரன், கிளை செயலாளர்கள் விஜய், ராஜ்குமார், அருண், திவாகர் ஜெயபிரகாஷ், பாரதி நகர் சுதாகர் செய்திருந்தனர்.
இதில்ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.