சுரண்டைபெட்ரோல் விலை உயர்வால் சுரண்டை பகுதியில் உள்ள சில பெட்ரோல் பெட்ரோல் பங்குகளில் ரூபாய் 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு சாமானியர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பெட்ரோலிய பொருட்களுக்கு எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யலாம் என்று முடிவு செய்த பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வை சந்தித்தது.
இருப்பினும் கடந்த சில வருடங்களாக பெட்ரோல் விலை உயராமல் இருந்த நிலையில் ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் சாமானிய சிறு விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்ந்து வருகிறது.


இந்நிலையில் சுரண்டை பகுதியில் உள்ள சில பெட்ரோல் பெட்ரோல் பங்குகளில் ரூபாய் நூறுக்கும் குறைந்த அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை இல்லை என அறிவித்துள்ளனர். ஏற்கனவே விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டுப்பாடு ஏழை எளிய மற்றும் அவசரத்திற்கு இருக்கின்ற பணத்திற்கு பெட்ரோல் டீசல் போடும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


ஆகவே சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் கேட்கும் தொகைக்கு பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

இது குறித்து பெட்ரோல் பல்க் தரப்பில் விசாரித்த போது பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் இருப்பு அளவு குறைய வாய்ப்புள்ளது என்பதால் இந்த கட்டுப்பாடு என தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் தரப்பில் விசாரித்த போது நவீன டிஜிட்டல் யுகத்தில் சாதாரண பெட்டிக்கடையில் ஒரு ரூபாய்க்கு சாக்கலேட் வாங்கினாலே ஆன்லைன் பரிவர்த்தனை கிடைக்கிறது

ஆனால் பெட்ரோல் பெட்ரோல் பங்குகளில் குறைந்த தொகை கட்டுப்பாடு என்பது கடுமையான சிரமத்தையே கொடுக்கிறது இன்று அனைத்து வீடுகளிலும் பைக்குகள் வந்து விட்ட நிலையில் தினசரி இருக்கிற பணத்திற்கு தேவைக்கு ஏற்ப பெட்ரோல் போட்டு செல்வோம் ஒருபுறம் பெட்ரோல் விலை உயர்வு மறுபுறம் குறைந்த தொகை கட்டுப்பாடு கூடுதல் சிரமத்தையே கொடுக்கிறது அதிலும் ஆயில் தனியாக போடும் வாகனங்கள் கூடுதல் சிரமம் அடைகின்றனர் என தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *