கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பெரிய கருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக், பிஸ்கட், இனிப்பு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர்
கருமலை குரூப் பகுதிகளில் உள்ள கருமலை, அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை டாப் மற்றும் வெள்ளமலை சோலைப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாணவர் சங்கத்தலைவர் சக்திவேல் தலைமையில் ஆலோசகர் வேல் பாண்டி, முனைவர் தர்மராஜ், டிஎன்எஸ்டிசி வன்னியராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பள்ளி தலையாசிரியர்களும், ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்நிலையில் மாணவர்களை ஊக்குவித்து வரும் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினரின் பணி சிறக்க பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்