காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோவையில் தனது முதல் வணிக அலுவலக வளாகமான ‘காசாகிராண்டு கிரவுன்’ அறிமுகப்படுத்தி உள்ளது..
இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிறுவன நிர்வாகிகள் கூறுகையில்,
அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ‘காசாகிராண்டு கிரவுன்’ அலுவலக வளாகம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடிஇஎஸ் நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன கட்டிடக்கலை, திறன்மிக்க தள அமைப்புகள், நிலைத்தன்மை கொண்ட உட்கட்டமைப்பு, சிற்றுண்டிச் சாலை உள்ளிட்ட பணியாளர் நட்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், கோவையில் தரமான அலுவலக இடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய முயற்சியாக அமையும் என தெரிவித்தனர்..
குறிப்பாக கோவை சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களுடன் சிறந்த இணைப்பைக் கொண்டுள்ள இந்த வளாகம், நகரின் முக்கிய வணிக முகவரிகளில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய காசாகிராண்டு குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் சிவசங்கர் ரெட்டி, “வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரமான கோவையில் காசாகிராண்டு கமர்ஷியலின் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற உலகத் தரம் வாய்ந்த அலுவலக சூழலை வழங்குவதோடு, கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.
மேலும், 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காசாகிராண்டு கமர்ஷியல் நிறுவனம் தற்போது 40 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் அலுவலக மற்றும் ரீடெயில் வளாகங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதாகவும், கோவையில் அறிமுகமாகியுள்ள ‘காசாகிராண்டு கிரவுன்’ அதன் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.