கோவையில் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக “இண்டஸ்ட்ரி கான்கிளேவ் ’26
பொறியியல் சார்ந்த தொழில் துறையின் நடைமுறை அனுபவமும், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் மாணவர்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்பு கோவை குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரி சார்பாக இண்டஸ்ட்ரி கான்கிளேவ் 26 எனும் தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதில், நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.
நிர்வாக அறங்காவலர்கள் பிரவீன் குமார்,,மற்றும் டாக்டர் ஸ்ரீநிதி பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ஜோசப் வி. தனிக்கல், முதல்வர் டாக்டர் திருமலை, டீன் டாக்டர் ராஜேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுமை மற்றும் வளர்ச்சிக்கான தொழில் துறை – கல்வி நிறுவனங்களின் இணைப்பு என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த தொழில் துறையினர், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமலை வரவேற்புரையாற்றினார் தொடர்ந்து கல்லூரி தலைவர் பொறியாளர் சுகுமாறன் தலைமையுரை வழங்கினார்.
இயக்குனர் ஜோசப் வி தனிக்கல்நிகழ்வின் நோக்கம் மற்றும் கல்வி–தொழில் நிறுவனங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்..
நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக டார்க் எலக்ட்ரிக் வாகன நிறுவனம் மற்றும் என்டுடியோ டெக்னாஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இதில் கார்த்திக் ,மஹா கிருஷ்ணன் மற்றும் நவீன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டனர்.முன்னதாக கான்கிளேவ் குறித்து செய்தியாளர்களிடம் கல்லூரியின் தலைவர் பொறியாளர் சுகுமாறன்,,மற்றும் இயக்குனர் ஜோசப் தனிக்கல் ஆகியோர் பேசுகையில், தொழில் துறையினரும் பொறியியல் துறை மாணவர்களும் இதுபோன்ற சந்திப்புகளில் தொடர்ந்து ஈடுபடுவது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
மாணவர்கள் கல்லூரியில் கல்வி பயின்று வெளியில் செல்லும்போது, பாடப்புத்தக அறிவுடன் தொழில் துறையின் நடைமுறை அனுபவமும், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்த புரிதலும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற கலந்தாய்வுகள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் துறைக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தி, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கு திறமையான பொறியாளர்களை உருவாக்குவதே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்…
நிகழ்வின் நிறைவாக ப்ளேஸ்மெண்ட் ஆஃபிசர் கார்த்திக் அபினந்த் நன்றியுரை வழங்கினார்.
செல்வகுமார் இண்டஸ்ரி கான்கிளேவ் 2026-ன் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பையும் மேற்கொண்டார் நிகழ்ச்சியில், கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் தொழில் சார் முக்கியஸ்தர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்…