செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையில், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த செ. சுரேந்தர் அவர்கள் மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தை வழங்கிய மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் கீழ்.க. அன்புச்செல்வன், பாசறை மாநிலச் செயலாளர் சூரா. ராஜ்குமார், பாசறை மாவட்டச் செயலாளர் கூடலூர் து.க. அன்பழகன் ஆகியோருக்கு செ. சுரேந்தர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைகளையும், சமூகநீதி மற்றும் சமத்துவக் கோட்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன் என செ. சுரேந்தர் தெரிவித்துள்ளார்.