கம்பம் பள்ளியில் ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகளுக்கான யோகா போட்டி தேனி மாவட்டம் கம்பம் ஜெய்டெக் இன்டர்நேஷனல் பள்ளி ஆடிட்டோரியத்தில் தேனி மாவட்ட அளவிலான 13 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான பள்ளி மாணவ மாணவிகள் யோகா போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன இந்த போட்டிகளில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 13 சிபிஎஸ்இ பள்ளிகள் கலந்து கொண்டு தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ஏ.ஜெகதீஷ் பள்ளி கரஸ்பாண்டன்ட் ஜெ.கீதா ஜெய் டெக் பள்ளியின் உதவி முதல்வர் கயல்விழி பங்கேற்றனர்
மாணவ மாணவிகள் பல்வேறு யோகாசனப் பிரிவுகளில் ஆர்வத்துடனும் திறமையுடனும் பங்கேற்று, தங்களது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜெய்டெக் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பாராட்டுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்
இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மனமாரப் பாராட்டினர். இது போன்ற யோகா போட்டிகள் மாணவ மாணவிகளின் உடல் ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பான அனுபவமாக அமைந்தாக யோகப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் நெகழ்ச்சியுடன் கூறினார்கள்.